1,270 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது  :

1,270 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது :

Published on

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள சிவன் கீழ மடவிளாகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீஸார், அங்கு சென்று நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த அகமது அப்துல் ஹமீது (30), நாகூர் சிவன் சன்னதி தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி (56), நாகை வெளிப்பாளையம் ராமர் மடத் தெருவைச் சேர்ந்த தனபால் முத்துசாமி (36) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.19.80 லட்சம் மதிப்புள்ள 1,270 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாகூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in