

கோவில்பட்டி முத்தமிழ் மன்றம்சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு “பண்டிகை என்றாலே பண்பாடு - பண்டிகை என்றாலே திண்டாடு” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. தலைமை யாசிரியர் ரூத் ரத்தினகுமாரி தலைமை வகித்தார். திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி தொடங்கி வைத்து பேசினார். பட்டிமன்ற நடுவராக புலவர் பொன்னுராசு செயல்பட்டார்.
“பண்டிகை என்றாலே பண்பாடு” என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க இணைச் செயலாளர் பிரபு, விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் லதாதேவி ஆனந்த், மாணவிகிருபா ஆகியோரும், “பண்டிகை என்றாலே திண்டாடு” என்ற தலைப்பில் இன்னர் வீல் கிளப்தலைவர் ஜெய கிறிஸ்டோபர், சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் முருகேசன், மாணவி யோகேஸ்வரி ஆகியோரும் பேசினர்.
இசை ஆசிரியர் கலைமாமணி அமல புஷ்பம், பள்ளியின் துணைதலைமையாசிரியர் உஷா ஜோஸ்பின் கலந்து கொண்டனர்.