

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் பள்ளிகொண்டா மின்கோட்டத்துக்கு உட்பட்ட வடகாத்திப்பட்டி, ஆம்பூர் நகரம், ஒடுக்கத்தூர் மற்றும் சோமலாபுரம் ஆகிய 4 துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், வரும் சனிக்கிழமை 6-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடகாத்திப்பட்டி, வேப்பூர், மேல் ஆலத்தூர், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூர், மாதனூர், அகரஞ்சேரி, பாலூர், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்ல மங்கலம், கீழ்கிருஷ்ணா புரம், ஒதியத்தூர், ஒடுக்கத்தூர், மேல் அரசம்பட்டு, ஆசனாம் பட்டு, கீழ்கொத்தூர், சேர்பாடி, குருராஜபாளையம், சின்ன பள்ளிகுப்பம், ஓ.ராஜா பாளையம், வேப்பங்குப்பம், சோமலாபுரம், ஆம்பூர் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சக்குப்பம், ஆலாங்குப்பம், சோலூர், தேவலாபுரம் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
மேலும், ஏ.எம்.பள்ளி, ரெட்டித் தோப்பு, தார்வழி,அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை,எம்.வி.குப்பம், வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என பள்ளிகொண்டா மின் கோட்ட செயற்பொறியாளர் மீனா தெரிவித்துள்ளார்.