ஜவுளிக் கடை எஸ்கலேட்டரில் இறங்கியபோது - 5-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயம் :

ஜவுளிக் கடை எஸ்கலேட்டரில் இறங்கியபோது -  5-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயம் :
Updated on
1 min read

மதுரையில் தீபாவளிக்கு புத்தாடை வாங்க அழகப்பன் நகர் அருகேயுள்ள பிரபல ஜவுளிக் கடைக்கு சென்ற குடும்பத்தினர், எஸ்கலேட்டரில் இறங்கியபோது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் படுகாயமடைந்தான்.

மதுரை எஸ்.எஸ்.காலனி வைத்தியநாதபுரத் தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் நித்தீஸ் (7). இவருக்கு புத்தாடை வாங்க அவரது தாய், தனது உறவினர் ஒருவருடன் பழங்காநத்தம் அருகே திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக் கடைக்கு நேற்று சென்றனர். அப்போது 5-வது மாடிக்கு தானியங்கி படிக்கட்டு மூலம் 3 பேரும் சென்றனர். படியின் ஓரத்தில் உள்ள கைப்பிடியை பிடித்தபடி சிறுவன் நித்தீஸ் சென்றுள்ளான்.

படிக்கு அருகே சுமார் 2 அடி இடைவெளி பகுதியில் 5-வது மாடியில் இருந்து தவறி தரைத்தளத்தில் விழுந்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுவனை பெற்றோர், ஜவுளி நிறுவன ஊழியர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சுப்பிரமணியபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in