ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 74 மி.மீ மழை - சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம் :

ராமநாதபுரம் தெற்குத்தெருவில் மழையால் சேதமடைந்த ஓட்டு வீடு. படம்: எல். பாலச்சந்தர்
ராமநாதபுரம் தெற்குத்தெருவில் மழையால் சேதமடைந்த ஓட்டு வீடு. படம்: எல். பாலச்சந்தர்
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை ராமநாதபுரத்தில் பெய்த மழை யால் பேருந்து நிலைய வளாகம், சந்தைத் திடல், பாரதி நகர், அரசு மருத்துவமனை சாலை, அக்ரஹாரம் ரோடு, தங்கப்பாபுரம், வசந்த நகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங் கியது.

இதனால், நகரில் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த மழையால் ராமநாதபுரம் அரண்மனை அருகே தெற்குத் தெருவில் ஓட்டுவீடு ஒன்றின் பக்கச் சுவர் இடிந்து விழுந்ததில் அங்குச்சாமி மனைவி ரத்தினம்மாள் (75) உயிரிழந்தார்.

நேற்று காலை 8 மணி நிலவரப் படி ராமநாதபுரம்- 74 மி.மீ, கமுதி- 62.20 மி.மீ, கடலாடி- 33.20 மி.மீ, ராமேசுவரம்- 25.20 மி.மீ, மண்டபம்- 22.20 மி.மீ, ஆர்.எஸ்.மங்கலம்- 21.20 மி.மீ மழை பதிவானது. மழையால் மேலக்கிடாரத்தில் முத்துசாமி ஓட்டுவீடு, புதுமாயவரத்தில் பூமா தேவி குடிசை வீடு, ரெகுநாத புரத்தில் குழந்தைச்சாமி வீடு, பொட்டகவயலில் நட்சத்திராவின் வீடும் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in