

கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாதாரண தேர்தலுக்கு புகைப்படத்துடன் கூடிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யவும், வாக்குச்சாவடி மையம் அமைத்தல் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.