தீபாவளியன்று பொதுவெளியில் மது அருந்தி - மக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை : தீவிரமாக கண்காணிக்க காவலர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தல்

தலை தீபாவளி கொண்டாடும் காவலர்களுக்கு பட்டாசு,  இனிப்பு மற்றும் பரிசுகளை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
தலை தீபாவளி கொண்டாடும் காவலர்களுக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசுகளை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எஸ்பிஜெயக்குமார் தலைமையில்மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் எஸ்பி பேசியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 3 ஏடிஎஸ்பிக்கள் தலைமையில் 1,500போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரவுடிகள் மற்றும் பழையகுற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். திரையரங்குகளில் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்வோர் மற்றும் அரசால் அறிவிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுவெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு மக்களுக்குஇடையூறு விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனங்களில் வேகப்பந்தயம் வைத்து செல்வோர்,மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, இளங்கோவன், ஏஎஸ்பிக்கள் ஹர்ஷ் சிங், சந்தீஸ், டிஎஸ்பிக்கள் கணேஷ், வெங்கடேசன், சங்கர், உதயசூரியன், சம்பத், கண்ணன், பிரகாஷ், பாலாஜி கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற தீபாவளிநிகழ்ச்சியில் எஸ்பி ஜெயக்குமார் கலந்துகொண்டு, காவலர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கூறி ஊக்கப்படுத்தினார். மேலும், தலை தீபாவளி கொண்டாடும் காவலர்கள் 46 பேருக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in