

வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு கட்ட கலந் தாய்வு வரும் 8-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், பி.ஏ., தமிழ், ஆங் கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளில் நிரப் பப்படாமல் எஞ்சியுள்ள ஒரு சில இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுவரை நடந்து முடிந்த 5 கட்ட கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்கள் கடைசி கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம்’’ என கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.