

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் பொதுசுகாதாரத் துறையில் தொடர்ந்து நீடிக்க அரசு உத்தரவிட வலியுறுத்தி நடந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கே.ராஜகணபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.மணிமாறன் முன்னிலை வகித்தார்.
பொது சுகாதாரத் துறையில் நியமிக்கப்பட்ட 1002 தனித்திட்ட நிலை -1 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இதற்கு அரசின் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், பொது சுகாதாரத் துறை மாவட்ட செயலாளர் இளவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.