பார்வையற்ற கவுரவ விரிவுரையாளருக்கு மனு அளித்தவுடன் இலவச பஸ் பாஸ் :

பார்வையற்ற கவுரவ விரிவுரையாளருக்கு  மனு அளித்தவுடன் இலவச பஸ் பாஸ் :
Updated on
1 min read

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் த.பிரபுசங்கர், மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்துக்கே சென்று, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவக்குமார், தனக்கு தினமும் பேருந்தில் சென்றுவர ஏதுவாக இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என மனு அளித்தார். இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்குள் சிவக்குமாருக்கு இலவச பேருந்து பயண அட்டை தயார் செய்யப்பட்டு, அதை சிவக்குமாரிடம் ஆட்சியர் வழங்கினார்.

மேலும், துரிதமாக செயல்பட்ட போக்குவரத்துத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர்களை ஆட்சியர் பராட்டினார்.

கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 190 மனுக்கள் வரப்பெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in