ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு :

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாரநாதா பீச் ரோடு பழைய கடற்கரை மீனவ சங்கத் தலைவர் ஜெகன், ராஜீவ் காந்தி நகர் மீனவர் நல பாதுகாப்பு சங்கத் தலைவர் நிகோலஸ், திரேஸ்புரம் அலை ஓசை சங்கு குளிப்பவர் முன்னேற்ற சங்கத் தலைவர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:

கடந்த 30 ஆண்டுகளாக எங்களின் குழந்தைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் கல்வி உதவித்தொகை வழங்கி வந்தது. மேலும்,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தது. ஆலைமூடப்பட்டுள்ளதால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த உதவிகள் கிடைக்கவில்லை. எங்களது வாழ்வாதாரம் மேம்பட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சாமிநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், “ எங்கள் கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி நீர்மட்டம் உயர ஸ்டெர்லைட் நிர்வாகம் உதவியது. பெண்களை தொழில்முனைவோராக மாற்ற நாப்கின் உற்பத்தி மையம் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் 25 பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in