நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிப்பு :

திருநெல்வேலியில் நேற்று பகல் பொழுதில்  லேசான தூறல் மட்டுமே விழுந்த நிலையில், மாலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது.சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் மெதுவாக சென்றன.படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் நேற்று பகல் பொழுதில் லேசான தூறல் மட்டுமே விழுந்த நிலையில், மாலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது.சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் மெதுவாக சென்றன.படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியாறு அணையில் 22 மி.மீ. மழை பதிவானது. ராதாபுரத்தில் 17 மி.மீ., சேர்வலாறில் 14, கொடுமுடியாறு அணையில் 12, நாங்குநேரியில் 7.40, களக்காட்டில் 6.20, மணிமுத்தாறு அணையில் 3.20, பாபநாசத்தில் 3, அம்பாசமுத்திரத்தில் 1 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,858 கனஅடி நீர் வந்தது. 1,405 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ள இந்த அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக இருந்தது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.51 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 746 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 80.90 அடியை எட்டியுள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.23 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.

தென்காசி

85 அடி உயரம் உள்ள கடனாநதி அணையின் நீர்மட்டம் 83 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.56 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 75.50 அடியாக இருந்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 129 அடியாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in