கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 37,233 பேருக்கு தடுப்பூசி :

கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 37,233 பேருக்கு தடுப்பூசி :
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் 618 இடங்களில் 7-ம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நேற்று நடைபெற்றன. பள்ளபட்டி ஹபீப் நகர் பகுதிக்கு நேற்று சென்ற மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், அப்பகுதி மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பின்னர், தாந்தோணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 3,703 பேருக்கு முதல் தவணை, 19,425 பேருக்கு 2-ம் தவணை என மொத்தம் 23,128 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 240 மையங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 14,105 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in