

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நடைபெற்ற 7-வது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் 74,914 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், காட்பாடி பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த முதியவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 10.96 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 7.62 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 3.33 லட்சம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் நடைபெற்ற 7-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 910 இடங்களில் நேற்று நடைபெற்றது. சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில், ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி, ஹோலிகிராஸ் பள்ளிகளில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். மாவட்டத்தில் நேற்று 35,374 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
உயிரிழந்தவருக்கு தடுப்பூசி
இதுகுறித்து அவர் கூறும்போது, " உயிரிழந்தவர் பெயரில் தேர்தலில் வாக்களித்ததை கேட்டிருக்கிறோம். இப்போது, தடுப்பூசி போடுகிறார்கள்" என்றார்.
இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘எந்த மையத்தில் இருந்து அதுபோன்ற பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று விசாரிக்கப்படும்’’ என தெரிவித்தனர்.
திருவண்ணாமலை
இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற் கட்ட தடுப்பூசியை 63 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட தடுப்பூசியை 22 சதவீதம் பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 1.72 லட்சம் பேர், இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்தி கொள்ள முன்வரவில்லை என சுகாதாரத் துறை புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மலை மாவட்டத்தில் 7-வது கட்ட தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்காக 1,075 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் 78,097 பேர் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர், 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, கோட்டாட்சியர் வெற்றிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.