லாரி மீது கார் மோதிய விபத்தில் - அரசு பெண் மருத்துவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு :

லாரி மீது கார் மோதிய விபத்தில் -  அரசு பெண் மருத்துவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

பவானி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் அரசு பெண் மருத்துவர், அவரது கணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரி உடையானூரைச் சேர்ந்தவர் தேவநாதன்(53). தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி இந்திராணி (51), மேட்டூரை அடுத்த வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்தார். இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து காரில் மேட்டூர் திரும்பினர். இவர்களுடன் தேவநாதனுடன் பணிபுரியும் ஊழியர் சத்தியசீலன்(24) என்பவரும் பயணித்துள்ளார்.

காரை தேவநாதன் ஓட்டி வந்தார். பவானி - மேட்டூர் சாலையில், காடப்பநல்லூர் பிரிவு அருகே,எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில், காரின் முன்பகுதி முழுமையாக சேதமானது.

பவானி போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விபத்துக்கு உள்ளான காரை ஒருமணி நேரம் போராடி மீட்டனர். விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். லாரியை ஓட்டிவந்த கேரளாவைச் சேர்ந்த ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பவானி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in