பட்டாசுக் கடைகளில் விதி மீறல்களா? : பறக்கும் படைக்கு உடனே தகவல் தெரிவிக்கலாம்

பட்டாசுக் கடைகளில் விதி மீறல்களா?  :  பறக்கும் படைக்கு உடனே தகவல் தெரிவிக்கலாம்
Updated on
1 min read

அரசின் விதிமுறைகளை மீறும் பட்டாசுக் கடைகள், குடோன்கள் மற்றும் நாட்டு வெடிமருந்து குடோன்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் உடனே தகவல் தெரிவிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் சில்லரை பட்டாசுக் கடை நிரந்தர உரிமம் பெற்றசெல்வகணபதி என்பவரின் பட்டாசுக் கடையில் கடந்த 26-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டு 7 பேர்உயிரிழந்தனர். மேலும் 11 நபர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இதுபோன்ற விபத்து ஏற்படாத வண்ணம் கண்காணித்திட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.தர்கூறியது:

சங்கராபுரம் போன்ற விபத்துஎற்படாத வகையில் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு அனைத்து பட்டாசு மற்றும் வெடிபொருள் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சரவணன்- 94450 00421, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்கொழுந்து- 99652 58800, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையத் அப்துல் பாரீ - 94454 17265, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கி.சாய்வர்தினி - 94450 00422, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்சாந்தி- 63803 90018, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் பிரகாஷ்வேல்-8405 56747 ஆகிய துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் பறக்கும் படை தலைமை அலுவலர்களாக செயல்படுவார்கள்.

பொதுமக்கள், பட்டாசுக் கடைகள் விதி மீறல்கள் குறித்த புகார் மற்றும் தகவல்களை 04151 - 228801 என்ற எண்ணிலும் மற்றும் பறக்கும் படை அலுவலர்களின் அலைபேசி எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in