ஊத்தங்கரை பாம்பாறு அணை தொடர் மழையால் நிரம்பியது :

ஊத்தங்கரை பாம்பாறு அணை தொடர் மழையால் நிரம்பியது :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு நீர்தேக்கம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, அங்குத்தி சுனை பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வருகிறது.

பாம்பாறு அணையின் மொத்த உயரம் 19.68 அடி. அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றாம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள் வலசை உட்பட 12 கிராமங்களில் 2501 ஏக்கர் விளை நிலங்களும், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாபோட்டை, வேடக் கட்டமடுவு மேல்செங்கம் பாடி, ஆண்டியூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் 1499 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் ஐவ்வாது மலையில் பெய்த தொடர் மழையால், பாம்பாறு அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் விநாடிக்கு 170 கனஅடி தண்ணீரும் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in