

கரூர் மாவட்ட அரசு அருங்காட்சி யகத்தில் காந்திய சிந்தனைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ்.சிவசங் கரன் முன்னிலை வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் பா.மணிமுத்து வரவேற்றார்.
கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசு கள் சங்க ஆலோசகர் ம.காமராஜ், இன்றைய இளம் தலைமுறையினருக்கு காந்திய கருத்துகள் எவ்விதம் பயன்படுகிறது என்பது குறித்து விவரித்தார். விழாவையொட்டி நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கரூர் மற்றும் குளித்தலை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன.