கோயில் சிலையை மீட்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல் :

கோயில் சிலையை மீட்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல் :
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோயில் சிலையை மீட்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆளப்பிறந்தான் ஊராட்சி குடிக்காடு கிராமத்தில் விநாயகர் கோயில் உள்ளது. கும்பாபிஷேகம் செய்வதற்காக கோயிலில் அண்மையில் பாலாலயம் செய்து, சிலையை வேறு இடத்துக்கு மாற்றி வைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த சிலை திடீரென மாயமாகிவிட்டது. பின்னர், அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு கோயிலில் உரிய மரியாதை அளிக்கவில்லை எனக்கூறி எடுத்துச் சென்று, வீட்டில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிலையை மீட்டுத்தருமாறு கோரி வட்டாட்சியர் மற்றும் போலீஸாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், சிலையை மீட்டுத் தருமாறு கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில் ஆளப்பிறந்தானில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 31 பேரை அறந்தாங்கி போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in