வேலூர் வட்டத்தில் - பட்டா பெயர் மாறுதல் சிறப்பு முகாம் :

வேலூர் அடுத்த கணியம்பாடியில் பட்டா பிழை திருத்துதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், பிழை திருத்தம் செய்யப்பட்ட பட்டாவை ஒருவருக்கு வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா. அருகில், வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

Updated on
1 min read

வேலூர் வட்டத்தில் பட்டா பெயர் மாறுதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் கணினி வழி பட்டா பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் நடை பெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் பெற்று வருகின்றனர். அதன்படி, வேலூர் வட்டத்துக்கு உட்பட்ட கணியம்பாடி கிராமத்தில் நேற்று நடைபெற்ற முகாமை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தொடங்கி வைத்தார். இதில், வட்டாட்சியர் செந்தில் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், சார் நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in