வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு இம்மாத இறுதியில் இழப்பீடு வழங்க நடவடிக்கை : வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு இம்மாத இறுதியில் இழப்பீடு வழங்க நடவடிக்கை :  வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
Updated on
1 min read

வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களுக்கும், பயிர் சேதங்களுக்கான நிலுவை இழப்பீட்டு தொகை அடுத்தமாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவில் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைதொடர்பாகவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க அகழிகள் அமைப்பது தொடர்பாகவும், அகழிகள் அமைக்க முடியாத இடங்களில் தொங்கும் வேலிகள் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் பயிர் சேதங்களுக்கான நிலுவை இழப்பீட்டுத் தொகை அடுத்தமாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில், முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்,உதவி வனப்பாதுகாவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in