புத்தக வாசிப்பை ஊக்குவிக்க விழிப்புணர்வு :

புத்தக வாசிப்பை ஊக்குவிக்க விழிப்புணர்வு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகர்கள் வட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் வாசகர் வட்ட தலைவர் நகுலன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 54-வது தேசிய நூலக வார விழாவை நவம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடுவது, கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாவட்ட மைய நூலகம் சார்பில் நீலகிரி மாவட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், இளம் எழுத்தாளர்களை உருவாக்கவும் குறிஞ்சிப்பூ காலாண்டு இதழ் வெளியிடுவது, பழங்குடியினர் விழிப்புணர்வுக்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் முதல் நிலை நூலகர் ரவி உட்பட கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in