முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் - கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு :

முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்  -  கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு  :
Updated on
1 min read

முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தைச் சேர்ந்த சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம் மதிப்பெண்ணும், தொழில் முறைப்படிப்பின் முதல் ஆண்டில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு Administrator General and Official Trustee of Tamil Nadu என்ற அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை ரூ. ஒரு லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

உதவித்தொகையை பெற கடந்த 2019-2020 மற்றும் 2020-2021-ம் கல்வியாண்டுகளில் தொழிற்கல்வி பயிலும் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்கள் அறிய முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலகத்தை 0427-2902903 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in