ராமநாதபுரம் அருகே - பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது :

ராமநாதபுரம் அருகே  -  பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது  :
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே சித்தார் கோட்டையில் பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் ராஜசேகர், வேட்டை தடுப்புக் காவலர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது பறவைகளை வேட்டையாடி வைத்திருந்த சித்தார்கோட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில்(40), அப்துல் சத்தார்(35), புகாரி அஹ்மத் அலி(31) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். மாங்குயில், புள்ளிப்புறா, சின்னான், குயில், கருஞ்சிவப்பு வால் ஈப்பிடிப்பான் உள்ளிட்ட அரிய வகை பறவைகளை வேட்டையாடி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அதையடுத்து முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 3 பேரையும் வனத் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி (ஏர் கன்) மற்றும் இறந்த நிலையில் 23 பறவைகளை கைப்பற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in