தடுப்பணையில்சிக்கிய மலைப் பாம்பு :

தடுப்பணையில்சிக்கிய மலைப் பாம்பு :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கோட்டை அருகே வெண்ணாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை மதகில் மீன்பிடிப்பதற்காக சிலர் வலை விரித்து வைத்திருந்தனர்.

இந்த வலையில் நேற்று காலை 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக, தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர்கள் செந்தில் குமார், துரைசாமி மற்றும் வீரர்கள் பால்ராஜ், சரண்சிங், மாதேஸ்வரன் ஆகியோர் அங்கு சென்று, மலைப் பாம்பை மீட்டு, அயன்பேரையூர் வனப் பகுதிக்கு கொண்டுசென்றுவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in