நெல்லையில் தற்கொலை செய்த - எஸ்ஐ உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் :

நெல்லையில் தற்கொலை செய்த -  எஸ்ஐ  உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் :
Updated on
1 min read

திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் பழனி (55). ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி 5 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். திருநெல் வேலி சந்திப்பிலுள்ள காவலர் குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்குமுன் இரவில் பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பிய பழனி விஷம் குடித்தார். திருநெல்வேலி சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ் சாட்டினர்.

மாநகர காவல் துணை ஆணையரிடம் அவர்கள் அளித்த மனுவில், ‘பணிச்சுமையால் பழனி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பழனியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in