வீர தீர செயல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு :

வீர தீர செயல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் சமூக முன்னேற் றத்துக்காக சேவையாற்றியவர்கள் வீர தீர செயலுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு ஆற்றிய வீர தீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த தகுதியுள்ள பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பிற பெண் குழந்தைககளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங் கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை வரும் நவம்பர் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in