சேலம் மாநகராட்சியில் அதிகாரிகள் இடமாற்றம் :

சேலம் மாநகராட்சியில் அதிகாரிகள்  இடமாற்றம் :
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக உதவி ஆணையர் ரமேஷ்பாபு, வருவாய் உதவி ஆணையராகவும், செயற்பொறியாளர் (திட்டம்) பழனிசாமி, கூடுதல் பொறுப்பாக கொண்டலாம்பட்டி உதவி ஆணையராகவும், அஸ்தம்பட்டி உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி, கூடுதல் பொறுப்பாக சூரமங்கலம் மண்டல அலுவலக உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, கூடுதல் பொறுப்பாக அஸ்தம்பட்டி மண்டல உதவி செயற்பொறியாளராகவும், அம்மாப்பேட்டை மண்டல உதவி செயற்பொறியாளர் எஸ்.செந்தில்குமார், சூரமங்கலம் உதவி செயற்பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொண்டலாம்பட்டி உதவி செயற்பொறியாளர் ஆர்.செந்தில்குமார், அம்மாப்பேட்டை உதவி செயற்பொறியாளராகவும், சூரமங்கலம் உதவி செயற்பொறியாளர், கொண்டலாம்பட்டி மண்டல உதவி செயற்பொறியாளராக இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in