சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில் ஆவின் சிறப்பு விற்பனை மையம் :

சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில்   ஆவின் சிறப்பு விற்பனை மையம் :
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில் ஆவின் சிறப்பு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆவின் பொது மேலாளர் கலைவாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் ஆவின் நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயார் செய்யப்பட்ட சிறப்பு இனிப்புகளான பால்கோவா (250 கி) ரூ.110, கேரட் மைசூர் பாக் (250 கி) ரூ.130, ஸ்பெஷல் மைசூர்பா (250 கி) ரூ.120, ஸ்பெஷல் மிச்சர் (250 கி) ரூ.95 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற தூய பசும் நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும். இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி பயன்பெறலாம்.

மேலும், சேலம் அம்மாப்பேட்டை ( பல பட்டறை மாரியம்மன் கோயில்), சாரதா கல்லூரி மெயின்ரோடு (சின்னபுதூர் வழி), குரங்குசாவடி (தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகில்), சேலம் ஜங்ஷன் ( உழவர் சந்தை), செவ்வாய்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம், ஆத்தூர் ராணிபேட்டை, ஆத்தூர் பேருந்து நிலையம், மேட்டூர் (காந்தி சிலை) ஆகிய 8 இடங்களில் சிறப்பு விற்பனை மையங்களில் இனிப்பு மற்றும் காரம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 97516 94664, 94880 62377, 94430 26950, 98425 64679 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தேவையான ஆர்டர்களை தெரிவிக் கலாம் என்று தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in