கூட்டுறவுத் துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை : ரூ.1 கோடியே 77 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு

கடலூர் சரவணவ பவ கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையில் தீபாவளி பட்டாசு கடையை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அருகில் எம்எல்ஏ ஐயப்பன்.
கடலூர் சரவணவ பவ கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையில் தீபாவளி பட்டாசு கடையை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அருகில் எம்எல்ஏ ஐயப்பன்.
Updated on
1 min read

கடலூரில் கூட்டுறவுத்துறை சார் பில் தீபாவளி பண்டிகையை முன் னிட்டு பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

பட்டாசு கடையினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் உத்தர விற்கிணங்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பொதுமக்களுக்கு தேவையான தரமானபட்டாசுகள் மற்றும் மத்தாப்புகள் மற்றும் கிப்ட் பெட்டிகள்மிக குறைவான விலையில் விற்பனை செய்யப் படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கும் ரூ.1 கோடியே 77 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சார்பாக கடலூரில் 3 இடங்கள், விருத்தாசலம் பண்ருட்டி நெய்வேலி முறையே 2 இடங்கள் மற்றும் சிதம்பரம் என 10 இடங்களில் பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தரமான பட்டாசு களை குறைந்த விலையில் பெற்று பயனடையலாம் என்று கூட்டுறவுத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார்,மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குநர் அன்பரசு, டான்பெட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் சுரேஷ்குப்தா, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in