கருணை அடிப்படையில் பணி ஆணை :

கருணை அடிப்படையில்  பணி ஆணை :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர் பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

பணியின்போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் மகள் சூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் மகன் சொரிமுத்து அய்யனார், சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மகன் சுரேஷ் ராஜா, தலைமை காவலர் சசிக்குமார் மகள் அட்சயா,காவலர் நவமணி ரத்தினரோச் சகோதரர் ஜஸ்டின் செல்வமணி ஆகியோர் பணி நியமனஆணையைப் பெற்றுக்கொண்ட னர். மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர் சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர் நம்பிராஜன் மற்றும் உதவியாளர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in