பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க : கவுந்தப்பாடியில் 30-ம் தேதி நாட்டுச்சர்க்கரை கொள்முதல் :

பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க : கவுந்தப்பாடியில் 30-ம் தேதி நாட்டுச்சர்க்கரை கொள்முதல் :
Updated on
1 min read

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பழநி முருகன் கோயிலுக்கு வரும் 30-ம் தேதி நாட்டுச்சர்க்கரை கொள்முதல் நடக்கிறது.

பழநி முருகன் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்குத் தேவையான நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்கு, பழநி தண்டாயுதபாணி கோயில் தேவஸ்தான நிர்வாகத்தினர் நாட்டுச் சர்க்கரை கொள்முதலுக்காக வரவுள்ளனர். எனவே, விவசாயிகள் நாட்டுச் சர்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து எடுத்து வந்து, ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும், கூடுதல் விவரங்களுக்கு 9944523556 மற்றும் 04256-240383 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in