

நாமக்கல் - திருச்சி சாலை என்.புதுப்பட்டியில் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. பண்ணை வளாகத்தில் முட்டைகளை பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பேக்கிங் அட்டைகள் தயாரிக்கும் ஆலை உள்ளது.
அங்கு 3 கிடங்குகளில் அட்டைப் பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 10 மணியளவில் ஒரு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவியது. தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மோகனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.