

2016 ல் கொண்டு வரப்பட்ட அரசாணைபடி அரசு மற்றும் தனியார்நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத வேலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார் பில், மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட் டம் நேற்று நடைபெற்றது.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர், அங்கு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மோகன் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.