திண்டுக்கல்லில் - சமுதாய வளைகாப்பு விழா :

திண்டுக்கல்லில்  -  சமுதாய வளைகாப்பு விழா :
Updated on
1 min read

திண்டுக்கல் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட திட்ட இயக்குநர் பூங்கொடி வரவேற்றார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கிப் பேசுகையில், மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

தாடிக்கொம்பு வட்டார மருத்துவர் பிரபாவதி, கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள், கருவுற்ற நாள் முதல் அரசின் நலத் திட்டங்கள் குறித்து பேசினார்.

திண்டுக்கல் ஒன்றியத் தலைவர் ராஜா, திமுக ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், பள்ளபட்டி ஊராட்சித்தலைவர் பரமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கர்ப்பிணிகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in