

ராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 4 வட்டாரங்களைச் சேர்ந்த 102 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலக வங்கி நிதியுதவிடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வட்டாரங்களில் உள்ள தொழில்முனைவோர்கள் பயன் பெறும் வகையில் ஓரிட சேவை வசதி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஏதேனும் முதுநிலை பட்டம் முடித்த மற்றும் கணினி திறன் பெற்றுள்ள 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க லாம். விண்ணப்பங்களை https://www.tnrtp.org என்ற இணையதள த்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, வருகிற 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், தேவி மருத்துவமனை வளாகம், 2-வது தளம், எண் 1, வசந்த் நகர், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.