தி.மலை தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள - திருத்தேர்களில் 3 அச்சாணிகள் திருட்டு : பஞ்ச ரதங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள முருகர் திருத்தேர் சக்கரம் அச்சாணி இல்லாமல் உள்ளது. அடுத்த படம்: அச்சாணி இல்லாமல் உள்ள விநாயகர் திருத்தேர் சக்கரம்.படங்கள்: இரா.தினேஷ்குமார்.
திருவண்ணாமலை தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள முருகர் திருத்தேர் சக்கரம் அச்சாணி இல்லாமல் உள்ளது. அடுத்த படம்: அச்சாணி இல்லாமல் உள்ள விநாயகர் திருத்தேர் சக்கரம்.படங்கள்: இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விநாயகர் மற்றும் முருகர் திருத்தேர்களில் இருந்து 3 அச்சாணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவ. 7-ம் தொடங்குகிறது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் வரும் நவ. 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பத்து நாள் உற்சவம் ஆரம்பமாகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் நவ. 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு கடந்த மாதம் 16-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பஞ்சரதங்களை செப்பணிடும் பணி தொடங்கப்பட்டது. இதையொட்டி, பஞ்சரதங்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகடு மற்றும் ஃபைபர் கண்ணாடி தகடுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. அதன்பிறகு, பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்நிலையில் விநாயகர் தேர் சக்கரங்களின் 2 அச்சாணிகள் மற்றும் முருகர் தேர் சக்கரத்தின் ஒரு அச்சாணி திருடு போயுள்ளது தெரிய வந்தது. பராமரிக்கும் பணி நடைபெறும்போது, கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்வதன் பேரில், திருத்தேர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். இந்தாண்டு, அதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றவில்லை என தெரியவருகிறது. இதனால், விநாயகர் மற்றும் முருகர் திருத்தேர்களில் இருந்த 3 அச்சாணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோயில் நிர்வாகம் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in