மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் : பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவு

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் :  பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவு
Updated on
1 min read

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான அதிகாரிகள் 10 பேரைஇடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அரசாணை:

பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட முதன்மை அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அதிகாரிகள் நிர்வாக நலன்கருதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இடமாற்றம் செய்யப்படும் இடம்:

ஆர்.திருவளர்செல்வி (துணை இயக்குநர் ஆசிரியர் தேர்வு வாரியம் - மாவட்ட முதன்மை கல்விஅதிகாரி, காஞ்சிபுரம்), அ.ஞானகவுரி (நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதிமகால் நூலகம், ஆய்வு மையம் - முதன்மை கல்வி அதிகாரி, விருதுநகர்), அ.பாலுமுத்து (மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நாமக்கல் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ராமநாதபுரம்), எஸ்.அருள்செல்வம் (முதன்மை கல்வி அதிகாரி, காஞ்சிபுரம் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, திருவண்ணாமலை), ஆ.அனிதா, (மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ராணிப்பேட்டை - துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை).

பி.மகேஸ்வரி (முதன்மை கல்விஅதிகாரி, விருதுநகர் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நாமக்கல்), எம்கேசி சுபாஷினி (முதன்மை கல்வி அதிகாரி, ராமநாதபுரம் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, திருநெல்வேலி), ஆர்.பூபதி (மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி, திருவண்ணாமலை - மாவட்ட முதன்மை கல்விஅதிகாரி, கடலூர்), சி.முத்துகிருஷ்ணன் (மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, திருநெல்வேலி - நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், ஆய்வுமையம்), ப.உஷா (துணை இயக்குநர் (சட்டம்), தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ராணிப்பேட்டை).

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in