சேலத்தில் இலவச திட்டத்தின் கீழ் - 50 விவசாயிகளுக்கு மின் இணைப்பு :

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். உடன் எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்ளிட்டோர்.		        	          படம்:எஸ். குரு பிரசாத்
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். உடன் எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்ளிட்டோர். படம்:எஸ். குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் மற்றும் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட 50 விவசாயிகளுக்கு இலவச திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்குதல், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியின்போது உயிரிழந்த மின் ஊழியர்களின் வாரிசுகள் 21 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு,எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

சேலம், மேட்டூர் மின் பகிர்மான வட்டங்களுக்கு உட்பட்ட 50 விவசாயிகளுக்கு, முதல்கட்டமாக விவசாய இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரத் துறையில் பணியின்போது உயிரிழந்த 21 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். விவசாயிகள் மின்சாரத்தையும், நீரையும் சிக்கனமாக பயன்படுத்தி தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் சண்முகம், தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in