பெரம்பலூருக்கு ரயில்பாதை கொண்டு வர நடவடிக்கை: எம்.பி பாரிவேந்தர் உறுதி :

பெரம்பலூருக்கு ரயில்பாதை கொண்டு வர நடவடிக்கை: எம்.பி பாரிவேந்தர் உறுதி  :
Updated on
1 min read

பெரம்பலூருக்கு ரயில்பாதை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் உள்ள சின்ன வெங்காயம் கிடங்கு, சிறுவாச்சூர் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை நேற்று பார்வையிட்ட எம்.பி பாரிவேந்தர், பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூருக்கு ரயில் பாதை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான முதல் கட்ட ஆய்வு பணி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சரிடம் தெரிவித்து தீர்வு காண முயற்சிப்பேன். என்னுடைய பதவி காலம் முடிவதற்குள் பெரம்பலூருக்கு ரயில் பாதை அமைக்க பாடுபடுவேன்.

செட்டிக்குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கை விரிவுபடுத்த மத்திய வேளாண் அமைச்சரிடம் கோரிக்கை வைத்து ஆவன செய்யப்படும். சின்னவெங்காயம் விலை குறையும்போது பாதிக்கப்படும் விவசாயிகளின் இழப்பை ஈடுசெய்யும் விதமாக பயிர்க் காப்பீடு செய்துகொள்ள வலியுறுத்தப்படும். செட்டிக்குளம், சிறுவாச்சூர் கோயில்களை புனரமைக்க எனது சொந்த நிதியிலிருந்து ரூ.45 லட்சம் வழங்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in