அறங்காவலர் குழு நியமிக்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு : 25 வயது பூர்த்தியான இந்து மதத்தினர் விண்ணப்பிக்கலாம்

அறங்காவலர் குழு நியமிக்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு :  25 வயது பூர்த்தியான இந்து மதத்தினர் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடுஇந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருவாய் பெறும் கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட “மாவட்டக் குழு” அரசால் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.

இந்த மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கு தகுதிவாய்ந்த இந்து சமயத்தை சேர்ந்த 25 வயது பூர்த்தியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இந்து சமயஅறநிலையத்துறை சட்டப்பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும்.

மாவட்ட அறங்காவலர் குழு நியமன உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், ஏ.ஆர்.லைன் ரோடு, பாளைங்கோட்டை, திருநெல்வேலி – 2 என்ற முகவரிக்கு வரும் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதர விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in