

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோவிந்த சேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (34). இவரது மனைவி ஹாஜீதா(27). திருமணத்துக்கு பிறகு தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால், கணவரிடம் கோபித்துக்கொண்டு ஹாஜீதா ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை காந்தி நகரில் உள்ள தாய் வீட்டில் வசதித்து வந்தார். அங்கு வந்தும் கண்ணன், ஹாஜிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹாஜீதா புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து விசாரணை நடத்தினர்.
இதையறிந்த கண்ணனின் சித்தப்பா பாஸ்கர் (55) என்பவர் ஹாஜீதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஸ் கரனை கைது செய்தனர்.