

கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்து வருவாய் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும், சிறுதொழில் செய்யவும் பயிற்சி அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்த தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட உள்ளது.
இந்த சங்கத்துக்கு ஒரு கவுரவச் செயலாளர், 2 கவுரவ இணைச் செயலாளர்கள், 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பத்தை ‘மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ரயில் நகர், தென்காசி 627 811’ என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ 10.11.2021-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.