

ஆரணி அருகே சொத்து தகராறில் அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தில் வசித்தவர் புருஷோத்தமன்(40), ரமேஷ்(37), ராஜசேகர்(34). சகோதரர்களான 3 பேரின், பூர்வீக வீட்டை பாகம் பிரித்துள்ளனர். அப்போது புருஷோத்தமனின் பாகத்துக்கு ஈடாக ரூ.7 லட்சத்தை கொடுப்பதாக தம்பிகள் ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பணத்தை கொடுக்க வில்லை. இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக, கடந்த 19-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டின் மாடிக்கு சென்று, புரு ஷோத்தமன் உறங்கியுள்ளார். அப்போது அவர் மீது பெட் ரோலை ஊற்றி ராஜசேகர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.