கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது :

கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த பட்டு மனைவி சிவமலை. இவர் கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன் ஏழுமலையின் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்துக்கு சமாதானம் பேசவந்தார். அப் போது அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் 5 பேர் மீது வழக் குப்பதிவு செய்து, 4 பேரை கைதுசெய்தனர். இதில் தொடர்புடைய சின்னசேலத்தைச் சேர்ந்த சின்னதுரை (46) தலைமறைவாகி விட்டார். போலீஸார் அவரை, தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் மூரர் பாளையத்தில் உறவினர் வீ்ட்டுசுப நிகழ்ச்சிக்கு சின்னதுரை வந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சின்ன துரையை கைது செய்து, சங்கராபுரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் ராஜசேகர் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in