விருதுநகரில் இளைஞர்களுக்கு - திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு :

விருதுநகரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
விருதுநகரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் விருது நகரில் தொடங்கப்பட்டது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

இதயம் குழும நிறுவனர் முத்து, பயனீர் குழும இயக்குநர் மகேஸ்வரன், பென்டகன் குழும நிர்வாக இயக்குநர் ஜவகர், ஆர்.வி. பொறியியல் கல்லூரித் தாளாளர் பிருந்தா ராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது:

நாடு முழுவதும் 356 இடங்களில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகரில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் தேசிய அளவிலான திறன் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு வழங்க விரும்புகிறோம்.

அத்துடன் தற்போதைய தலைமுறையினருக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு தேவைக்கேற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ப தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in