பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் சசிகலா பங்கேற்க அனுமதி கேட்டு அதிமுகவினர் மனு :

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர்  எஸ்.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் சசிகலா பங்கேற்க அனுமதி கேட்டு அதிமுக நிர்வாகிகள், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா வரும் 28 முதல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவில் 29-ம் தேதி காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் சசிகலா பங்கேற்று மரியாதை செலுத்த அனுமதியும், தகுந்த பாதுகாப்பும் அளிக்க வேண்டும் எனக் கோரி அதிமுக ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலரும், மாணவரணி ஒன்றியச் செயலருமான எஸ்.முத்துராமலிங்கம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலர் சரவணன் ஆகியோர், நேற்று ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இதனிடையே, அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், அக்.30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க உள்ளது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், அன்வர் ராஜா ஆகியோர் நேற்று ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.

அதேபோல் அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குருபூஜை விழாவில் பங்கேற்க உள்ளது தொடர்பாக அமமுக மாவட்டச் செயலாளர்கள் ஜி.முனியசாமி, எம்.முருகன் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in