

தி.மலை மாவட்டத்தில் சாத்தனூர் உட்பட 3 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
119 அடி உயரம் உள்ள சாத் தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த3 நாட்களாக 97.45 அடியாக உள்ளது. அணையில் 3,392 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 1,416 கனஅடி தண்ணீர் முழுவதும், அப்படியே வெளி யேற்றப்படுகிறது.
59.04 அடி உயரம் உள்ள குப் பநத்தம் அணையின் நீர்மட்டம், கடந்த 5 நாட்களாக 57.07 அடியாக உள்ளது. அணையில் 647 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 130 கனஅடி தண்ணீர் முழுவதும், வெளியேற்றப்படுகிறது.
62.32 செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக உள்ளது. அணை பகுதியில் 206 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 56 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 18.53 அடியாக உள்ளது. அணையில் 63.225 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 18 கனஅடி தண்ணீர் வருகிறது.