காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் :

அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த காஞ்சி புரம் முக்தீஸ்வரர்.
அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த காஞ்சி புரம் முக்தீஸ்வரர்.
Updated on
1 min read

மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி கிராமத்தில் உள்ள மனோன்மணி சமேத திருவகத்தீஸ்வர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், மூலவருக்கு 20 கிலோ அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் மற்றும் காய்கறிகள் மூலம் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசித்து, சுவாமியை வழிபட்டனர். இதேபோல், திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், முக்தீஸ்வரர் கோயில், சித்தீஸ்வரர் கோயில், நகரீஸ்வரர் கோயில், புன்னியகோட்டீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல் கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில்  விசாலாட்சி சமேத உத்திர கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in