வாகன சோதனையில் பாரபட்சம்; முசிறி எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் :

வாகன சோதனையில் பாரபட்சம்; முசிறி எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் முசிறியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவில் பம்பர் பொருத்தி இருந்ததற்காக வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

அதேசமயத்தில் அவ்வழியாகச் சென்ற வழக்கறிஞர் ஒருவரின் காரில் பம்பர் பொருத்தப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதை ஆட்டோ ஓட்டுநர் சுட்டிக்காட்டி, அந்த வாகனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில், சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டரான வடமலையை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி பா.மூர்த்தி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு முசிறி டிஎஸ்பிக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in